கேரளா பெண் மருத்துவர் கொலை..! அவசர உயர்மட்டக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் அழைப்பு..!

Pinarayi Vijayan

சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பது தொடர்பாக அவசர உயர்மட்டக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரளாவில் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் நேற்று 23 வயதான பெண் மருத்துவர் ஒருவர், நோயாளியால் ஒருவரால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். கொட்டாரக்கரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் வந்தனா தாஸ் என்ற பெண் மருத்துவர் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட பள்ளி ஆசிரியர் சந்தீப், திடீரென அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து மருத்துவர் வந்தனா தாஸை பலமுறை குத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதன்பின், அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, இந்த கொலையை கண்டித்தும் வந்தனாவுக்கு நீதி கோரியும் கேரளா முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது, அவசர சேவைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. மேலும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர சட்டம் நிறைவேற்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேரள முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், டாக்டர் வந்தனா தாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்களைத் தடுக்கவும், சுகாதார நிபுணர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கைகளை எடுக்கும் என்று அம்மாநில முதல்வர் ட்வீட் செய்திருந்தார். இதனைத்தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பது தொடர்பாக அவசர உயர்மட்டக் கூட்டத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்