மக்களுக்கு தீங்கு விளைவித்தால் புகையிலைக்கு தடை விதிக்கலாம்.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!
மக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இருக்கும் புகையிலை பொருட்களை அரசு தடை செய்ய அதிகாரம் உண்டு என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னையை சேர்ந்த ஓர் தனியார் நிறுவனம் அரசு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். தாங்கள் புகையிலை பொருட்கள் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருவதாகவும், உணவு பொருள் பாதுக்காப்பு சட்டத்தின் கீழ் அரசு புகையிலை இறக்குமதியை தடுக்க நடவடிக்கை எடுக்க கூடாது என கோரி இருந்தனர்.
இந்த வழக்கு விசரணையின் போது, ஏற்கனவே இரட்டை நீதிபதி அமர்வு உத்தரவை சுட்டிக்காட்டி, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் புகையிலை அளவு (நிகோடின்) இருந்தால் அதனை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு எனவும் அதன் மீதான தடை உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரமும் உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது.