நள்ளிரவில் சென்னையில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களை சுற்றிவளைத்த போலீஸ்!

Default Image

நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னையில் பல்வேறு இடங்களில்  போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி பைக்ரேசில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் ரோந்து வாகனத்தில் துரத்திச் சென்றும், பேரிகார்டுகள் அமைத்தும் சுற்றிவளைத்து பிடித்தனர்.

சென்னையின் பல்வேறு இடங்களில் பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் பைக்ரேஸ்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு சென்னை மெரீனா கடற்கரைப் பகுதியில் சாலை ஓரத்தில் இருசக்கர வாகனங்களில் காத்திருந்த எராளமானவர்கள் திரைப்படக் காட்சிகள் போன்று ஒரே நேரத்தில் பைக் ரேசுக்கு புறப்பட்டனர்.

போலீசார் அவர்களை துரத்தியதையடுத்து பலர் தப்பியோடினர். போலீசார் தங்கள் ரோந்து வாகனத்தில் பைக் ரேசில் ஈடுபட்டவர்களை துரத்திச் சென்றனர்.

கடற்கரைச் சாலையில் போலீசாரின் கட்டுப்பாடுகளை அடுத்து ஆர்.கே.சாலையில் அவர்கள் பைக்ரேசில் ஈடுபட்டனர்

சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசங்களிலும் அவர்கள் ஈடுபட்டனர்.

இதே போன்று அடையாறு திரு.வி.க. மேம்பாலப் பகுதியில் பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் போலீசாரைக் கண்டதும் எதிர் மார்க்கத்துக்குச் சென்று தவறான பாதைகளில் தப்பினர்.

அவர்களில் 3 பேரை மட்டும் பேரிகார்டுகளை அமைத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

பைக்ரேசில் ஈடுபட்டதற்காக நேற்று முன் தினம் 6 பேர் பிடிபட்ட நிலையில் நேற்றும் இளைஞர்கள் பைக்ரேஸ் மற்றும் சாகசஙகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்