25-ஐ தாண்டவில்லை… ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த சென்னை அணி.!
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் எந்த வீரரும் 25 ரன்களுக்கு மேல் குவிக்காமல் அந்த அணி வெற்றி பெற்று புதிய சாதனை.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை-டெல்லி மோதிய போட்டியில் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் சென்னை அணி ஒரு வித்தியாசமான சாதனையை படைத்துள்ளது. அதாவது சென்னை அணியில் எந்த வீரரும் 25 ரன்களைக் கூட தாண்டவில்லை, ஆனாலும் சிஎஸ்கே வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
முன்னதாக இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 167/8 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக துபே(25), ருதுராஜ்(24), ராயுடு(23), ரஹானே(21), ஜடேஜா (21), மற்றும் தோனி(20)ரன்கள் என அணியில் எந்தவொரு வீரரும் 25 ரன்களை தாண்டவில்லை.
இதுபோன்று ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியில் எந்தவீரரும் 25 ரன்களுக்கு மேல் குவிக்காமல் அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.