ரூ.4400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி.!
பிரதமர் மோடி குஜராத்தில் நாளை ரூ.4400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.
குஜராத்: பிரதமர் திரு நரேந்திர மோடி மே 12ஆம் தேதி நாளை குஜராத் செல்கிறார். அங்கு காலை 10:30 மணியளவில், காந்திநகரில் உள்ள அகில் பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷன் நிகழ்வில் பங்கேற்கிறார்.
அதன்பின், மதியம் 12 மணிக்கு காந்திநகரில் சுமார் 4400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் கிஃப்ட் சிட்டிக்கு வருகை தருகிறார்.
காந்திநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில், 2450 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். நகர்ப்புற வளர்ச்சித் துறை, நீர் வழங்கல் துறை, சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மற்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையின் திட்டங்கள் இதில் அடங்கும்.
பனஸ்கந்தா மாவட்டத்தில் பல கிராம குடிநீர் விநியோகத் திட்டங்கள், அகமதாபாத்தில் ஆற்று மேம்பாலம், நரோடா ஜிஐடிசியில் வடிகால் சேகரிப்பு வலையமைப்பு, மெஹ்சானா மற்றும் அகமதாபாத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தஹேகாமில் உள்ள ஆடிட்டோரியம் உள்ளிட்ட பல திட்டங்களில் துவக்கப்படும் திட்டங்கள் அடங்கும்.