#BREAKING: புதிய அமைச்சராக பதவியேற்றார் டி.ஆர்.பி.ராஜா!

TRBRaja

தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா.

மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் புதிய அமைச்சராக பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்று வரும் பதவியேற்பு நிகழ்ச்சியில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக அரசின் அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன இலாகா ஒதுக்கப்படும் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு மகன் டி.ஆர்.பி.ராஜா மன்னார்குடி தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்