தோனி கடைசில அடிச்ச அந்த சிக்ஸர்..! வைரலாகும் அசத்தல் வீடியோ.!
நேற்று நடைபெற்ற CSK vs DC போட்டியில் முதல் இன்னிங்ஸின் இறுதியில் தோனி அடித்த சிக்ஸர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
16- வது ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டில் சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதன்படி, முதலில் களமிறங்கிய சென்னை அணி நல்ல தொடக்கத்துடன் தனது இன்னிங்ஸை விளையாட ஆரம்பித்தது. பின்பு பொறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த சிவம் துபே(25 ரன்கள்), ருதுராஜ் கெய்க்வாட்(24 ரன்கள்) ஆட்டமிழக்க, கேப்டன் தோனி களமிறங்கினார்.
18 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் அடித்திருந்த சென்னை அணிக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், தோனி 18.3 ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்துபறக்கவிட்டார். பின்னர் அதே ஓவரில் அவர் அடித்த மற்றொரு சிக்ஸர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அவரடித்த 2 சிக்ஸர்கள் மற்றும் அதிரடியான ஆட்டத்தால் சென்னை அணிக்கு டிபென்ட் செய்ய நல்ல ஸ்கோர் கிடைத்தத என்றே கூறலாம்.
இதனையடுத்து 168 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, சென்னை அணியின் அசத்தலான பந்துவீச்சால் 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது. தற்பொழுது தோனி அடித்த அந்த சிக்ஸர்களின் விடியோவை சிஎஸ்கே ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
???? 10.05.2023 – Thala @ Anbuden ????pic.twitter.com/bezDcb9LwV
— Chennai Super Kings (@ChennaiIPL) May 10, 2023