அதிமுகவை பலவீனப்படுத்தி திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நோக்கம் – சி.வி.சண்முகம்

cvshanmugam

அதிமுகவை பலவீனப்படுத்தி திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நோக்கம் என சி.வி.சண்முகம் பேட்டி. 

நேற்று முன்தினம் பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு  மேற்கொண்டார். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அந்த வகையில், டெல்லியில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பால் எந்த தாக்கமும் இல்லை; ஓபிஎஸ் அதிமுகவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை.

அதிமுக இயக்கத்தை பிளவுபடுத்தியவர் ஓபிஎஸ், அவர் ஒரு திமுகவின் விசுவாசி; சசிகலாவையும், டிடிவி தினகரனையும் எதிர்த்து தர்மயுத்தம் நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவை பலவீனப்படுத்தி திமுகவிடம் விற்க வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்