அழைப்பு உங்களுக்கு தான்..! ரிசர்வ் வங்கியில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு.! விவரம் இதோ…
மத்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அலுவலர் பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு முடித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கிரேடு ‘பி’ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நாடு முழுவதும் 291 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.06.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள் – வயது வரம்பு :
கிரேடு -B (DR) பொது 222, காலிப்பணியிடங்கள், கிரேடு-B (DR)- DEPR 38 காலிப்பணியிடங்கள், கிரேடு-B (DR)-DSIM – 31 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான வயதுத் தகுதியானது விண்ணப்பதாரர் 01.05.2023 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
கிரேடு0-B பொது பிரிவுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். DEPR மற்றும் DSIM பிரிவுகளுக்கு கணிதம், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு இரண்டு கட்ட தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உள்ளன. அனைத்தும் ஆன்லைன் வழியாக மட்டுமே நடைபெறும். நேர்முக எழுத்து தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.rbi.org.in அல்லது ibpsonline.ibps.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதியானது 09.06.2023 ஆகும்.
விண்ணப்பக் கட்டணமானது பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.850 ஆகவும், SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.