CSK vs DC: வெற்றி பெறப்போவது யார்? டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்.!

CSKvsDC IPL

ஐபிஎல் தொடரின் இன்றைய CSK vs DC போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிப்பட்டியலில் டெல்லி அணி 8 புள்ளிகளைப் பெற்று கடைசி இடத்திலும், சென்னை அணி 13 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இருக்கிறது. CSK அணி கிட்டத்தட்ட பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்த நிலையில் இன்றைய போட்டியில் வென்று வலுவான நிலைக்கு செல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

டெல்லி அணியைப் பொறுத்தவரை மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றால் கூட, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே பிளேஆப்-க்கு முன்னேறும் என்பதால் டெல்லி அணி நல்ல ரன் ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்குகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.  

சென்னை அணி: ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(W/C), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

டெல்லி அணி: டேவிட் வார்னர் (C), பிலிப் சால்ட் (W), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், கலீல் அகமது, இஷாந்த் சர்மா

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்