போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய செய்தி.! நான் முதலவன் -போட்டித்தேர்வு முக்கிய அறிவிப்பு.!
நான் முதலவன் திட்டத்தின் கீழ் நடைபெறும் போட்டித்தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
தமிழக அரசு அறிமுகப்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவர்கள் படத்திட்டத்துடன் சேர்த்து, தொழில்நுட்ப பயிற்சியையும் அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் திட்டத்தை தமிழக அரசு உருவாகியுள்ளது.
இந்த நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித்தேர்வு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவகையில், மத்திய அரசு போட்டி தேர்வுகள், வங்கி தேர்வுகள், குடிமை பணிகள் போட்டித்தேர்வுகள் ஆகிய போட்டித்தேர்வுகளுக்கு இலவசமாக தமிழக அரசு சிறந்த பயிற்சியை அளிக்க உள்ளது.
தற்போது நான் முதல்வன் போட்டித்தேர்வில் பங்கேற்க naanmudhalvan.tn.gov.in இந்த இணையத்தளத்திற்கு சென்று, 20-05-2023க்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், அதன் மூலம் மாவட்டத்திற்கு 150 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பானது 25-05-2023 முதல் துவங்கப்பட உள்ளது.
“நான் முதல்வன்” போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கவிருக்கிறது#CMMKSTALIN #TNDIPR#நான்முதல்வன்@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @Udhaystalin @naanmudhalvanTN pic.twitter.com/OfSdCuoo7O
— TN DIPR (@TNDIPRNEWS) May 10, 2023