1,200 பேருக்கு வேலைவாய்ப்பு! சென்னையில் அமைகிறது சிஸ்கோ தொழிற்சாலை!
சிஸ்கோ நிறுவனம் தொழிற்சாலையில் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு.
தமிழ்நாட்டில் மிகப்பெரிய உற்பத்தி ஆலையை அமைகிறது சிஸ்கோ (cisco) நிறுவனம். பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்யும் சிஸ்கோ நிறுவனம் சென்னையில் புதிய தொழிற்சாலையை தொடங்க உள்ளது. புதிய தொழிற்சாலையில் ரூ.8,200 கோடி மதிப்புக்கு பொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் சிஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் புதிய அமையவுள்ள சிஸ்கோ நிறுவனம் தொழிற்சாலையில் சுமார் 1200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆலைக்கான பணிகள் நடந்து வருவதாகவும் அடுத்த 12 மாதங்களில் முதல் பேட்ஜ் தயாரிப்புகள் வெளியாகும் என இந்தியா வந்துள்ள அந்நிறுவன சிஇஓ தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலையை தொடங்க முன்வந்துள்ள சிஸ்கோவின் அறிவிப்புக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்பு அளித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆலை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள சிஸ்கோ தலைமை செயல் அதிகாரி சக் ராபின்ஸ்க்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார். மேலும், டாவோஸ் சென்றிருந்த போது தமிழ்நாட்டில் சிஸ்கோ முதலீடு செய்வது குறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.