கர்நாடகா சட்டமன்ற தேர்தல் : கருத்துக்கணிப்பில் வெற்றி யார் பக்கம்..?

KarnatakaElection2023

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் குறித்து தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதன்படி, பாஜக 224, காங்கிரஸ் 223, மதசார்பற்ற ஜனதா தளம் 207, பகுஜன் சமாஜ் கட்சி 193 தொகுதிகளில்  போட்டியிட்டன.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த தேர்தலில் மொத்தமாக 5.21 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த தகுதியானவர்களாக  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தேர்தல் நிரைவடைந்துள்ள நிலையில், கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் குறித்து தனியார் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி தான் முதல் இடம் வகிக்கிறது.

சி-வோட்டர் 

  • காங்கிரஸ் – 100-112
  • பாஜக – 83-95
  • மஜத – 21-29
  • பிற -02-06

ஜி மேட்ரிக்ஸ் 

  • காங்கிரஸ் – 103-118
  • பாஜக – 79-94
  • மஜத – 25-33
  • பிற – 2

டைம்ஸ் நவ் 

  • காங்கிரஸ் –  86
  • பாஜக –  114
  • மஜத – 21
  • பிற – 3

ஏசியாநெட் டிவி 

  • காங்கிரஸ் –  91-106
  • பாஜக –  94-117
  • மஜத –  14-24
  • பிற – 2

TV9 

  • காங்கிரஸ் –  99-109
  • பாஜக –  88-98
  • மஜத –  21-26

ரிபப்ளிக் டிவி 

  • காங்கிரஸ் –  94-108
  • பாஜக –  85-100
  • மஜத –  24-32
  • பிற – 2-6

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்