AI மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக அமைய முடியாது..! ஆப்பிள் இணை நிறுவனர்

செயற்கை நுண்ணறிவு, மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக அமைய முடியாது என ஆப்பிள் இணை நிறுவனர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு:
செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக அமைய முடியாது, ஏனெனில் அதில் உணர்ச்சிகள் கிடையாது என்று ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக் கூறினார். செயற்கை நுண்ணறிவு என்பது பொதுவாக இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்துவிடுகிறது. இவற்றில் ஒன்றுதான் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ChatGPT என்பதாகும்.
மனிதர்களுக்கு மாற்று :
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், செயற்கை நுண்ணறிவு குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், செயற்கை நுண்ணறிவால் எந்த நேரத்திலும் மனிதர்களுக்கு முழுமையான மாற்றாக அமைய முடியாது, ஏனெனில் அதற்கு உணர்ச்சிகள் கிடையாது. இருப்பினும், ChatGPT போன்ற AI, மிகவும் நம்பகத்தன்மையுடைய உரைகளை உருவாக்குவதால் ஹேக்கர்கள் மற்றும் சைபர் தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு மக்களின் தரவுகளை எளிதில் கையாள முடியும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தொழில்நுட்பத்தை நிறுத்த முடியாது:
மேலும், AI ஆல் உருவாக்கப்படுகின்ற ஓவ்வொன்றிற்கும் மனிதர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதாவது, AI ஆல் உருவாக்கப்பட்ட உரைகள், செயலிகள் போன்றவற்றை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதால், அதை வெளியிடும் நபர் அனைத்து பொறுப்புகளையும் ஏற்கவேண்டும். தொழில்நுட்பத்தை எங்களால் நிறுத்த முடியாது, ஆனால் தனிப்பட்ட தரவை மீறும் மோசடிகள் மற்றும் தீங்கிழைக்கும் முயற்சிகளைக் கண்டறிய பயனர்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும். என்று வோஸ்னியாக் தெரிவித்துள்ளார்.