600க்கு 600 மதிப்பெண்.! மாணவி நந்தினிக்கு விருது வழங்கி கௌரவித்த ஆளுநர் ஆர்.என்.ரவி.!

Nandini and RNRavi

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் இன்று தமிழக ஆளுநர் ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

சென்னை: ஆளுநர் மாளிகையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுடன் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். அப்போது பேசிய ஆளுநர் ரவி, நீங்கள் எந்த துறையில் சேர்ந்து படித்தாலும் அதில் திறமையோடு விளங்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், மருத்துவம் படிக்க ஆசை இருப்பவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என ஆளுநர் மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே, சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் இவ்வாறு பேசியது சர்ச்சையை கிளப்பவது போல் தெரிகிறது.

பின்னர், இந்த நிகழ்வில் தமிழகத்தில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவி நந்தினிக்கு அவர் விருது வழங்கி கவுரவித்தார். முன்னதாக இந்த மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உட்பட பலரும் பரிசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்