மிரட்டல் சாதனை…சென்னை, பஞ்சாப் அணிகளை பின்னுக்கு தள்ளிய மும்பை இந்தியன்ஸ்.!!

mumbai indians 2023 record

ஐபிஎல்லில் 200 ரன்களை அதிகமுறை ஜேஸ் செய்த அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.

ஐபிஎல் 2023 இன் 54-வது  லீக் போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்த சீசனில் விளையாடிய 11 ஆட்டங்களில் 6-வது  வெற்றியைப் பதிவு செய்தது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் குவித்தது. அடுத்ததாக 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக விளையாடி  16.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  200 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 83 ரன்களும், நேஹால் வதேரா 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும் எடுத்தார். நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றது மட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் பல சாதனைகளை முறியடித்தது.

அதன்படி, ஐபிஎல் லீக் வரலாற்றில் ஒரே சீசனில் 200-க்கும் மேற்பட்ட ரன் இலக்கை மூன்று முறை ஜேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு முன்பு 213 ரன்கள் மற்றும் 215 என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஏப்ரல் 30,  மே 3 ஆம் தேதிகளில் ஜேஸ் செய்தது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 200 ரன்களை ஜேஸ் செய்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்தது. இதற்கு முன்பு 2014 இல் பஞ்சாப் கிங்ஸ் 2 முறையும், 2018 இல் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 முறையும் ஜேஸ் செய்து வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்