அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு உதவி…விஜய் செய்யப்போகும் நெகிழ்ச்சி சம்பவம்.!!

vijay happy

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டி கல்வி உதவித்தொகை வழங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். 

நடிகர் விஜய் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மூலமாக பல உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது, பள்ளி பொது தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவ- மாணவியருக்கு பரிசு மற்றும் கல்வி உதவி தொகை வழங்க உள்ளாராம்.

Vijay
Vijay [Image source : Twitter/@FlyingEagle ]

12-ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் மாவட்டந்தோறும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க மக்கள் மன்றத்தினரிடம் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.  அதைப்போலவே, 10ம் வகுப்பு தேர்விலும் மாவட்டம் தோறும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களின் விவரங்களை சேகரிக்க உள்ளார்களாம்.

vijay
{Image source : Twitter/SunPictures}

இதில், அந்த 3 இடங்களை பிடிக்கும் மாணவிய- மாணவர்கள் அனைவரையும் நேரில் அழைத்து பரிசு வழங்க உள்ளாராம் விஜய். 10-ம் வகுப்பு, பிளஸ் – 2வில் மூன்று பேர் வீதம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

vijay
vijay [Image source : Ndtv]

மேலும், இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு கூடும் ரசிகர்களுக்கு மத்தியில், மாணவ மாணவியருக்கு, தன்கையால் உதவித் தொகைகளை, பரிசுகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்