முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி..!
12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்ணா நூலகத்தில் வெளியிட்டிருந்தார்.
பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சி எனவும், அதில் மாணவிகள் 96.38% பேரும், மாணவர்கள் 91.45% பேரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இன்று, 12ம் வகுப்பில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.