பேருந்து கவிழ்ந்து 15 பேர் பலி..25 பேர் சிகிச்சை – நிவாரணம் அறிவித்தது மத்திய பிரதேச அரசு!
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தது மத்தியப் பிரதேச அரசு.
மத்தியபிரதேச மாநிலத்தில் கார்கோன் மாவட்டத்தில் ஆற்றின் 50 அடி உயர பாலத்தில் இருந்து பயணிகள் பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கார்கோனில் ஆற்றுபாலத்தில் சென்ற பேருந்து திடீரென தடுப்புசுவரை உடைத்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கார்கோனில் பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் உடனடியாக வழங்க மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000, சிறு காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.