#KarnatakaElection : இன்றுடன் ஓய்கிறது பரப்புரை..! நாளை தேர்தல்..!
கர்நாடகாவில் இன்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும் நிலையில், நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
கர்நாடகாவில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த சில மாதங்களாகவே அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்தது.தற்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கர்நாடகாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடைகிறது. நாளை கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.