#Breaking : டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு..!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டிடிவி.தினகரனை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், தற்போது பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சசிகலா, டிடிவி தினகரனுடன் ஏற்கனவே இணைந்து செயல்பட தயார் என்று ஓபிஎஸ் அறிவித்திருந்த நிலையில், தற்போது டிடிவி தினகரனை சந்தித்துள்ளார்.
ஓபிஎஸ்-ஐ வாசல் வரை வந்து டிடிவி தினகரன் வரவேற்று அழைத்துச் சென்றார். இந்த சந்திப்பின்போது ஓபிஎஸ் உடன் பன்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து, மேற்கொண்டு சசிகலாவையும் ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.