#BIGBREAKING: டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.!
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க இருக்கின்றனர். சென்ன அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் மாலை 7 மணிக்கு சந்திப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் செல்கிறார்.
இன்று நடைபெறும் சந்திப்பில் இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவ, டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து செயல்படத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.