ஐசிசி டெஸ்ட் உலகசாம்பியன்ஷிப் பைனல்…. கே.எல். ராகுல் விலகல்… இஷான் கிஷன் அணியில் சேர்ப்பு.!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கேஎல்ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய அணியில் கேஎல் ராகுல் காயம் காரணமாக விலகியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக இறுதிப்போட்டியில் விளையாடும் இந்திய டெஸ்ட் அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
முன்னதாக ஐபிஎல் தொடரில் விளையாடும் போது லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பீல்டிங் செய்கையில் காயமடைந்தார். இதனால் அவர் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார், இதனால் அவர் தற்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் விளையாடாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, அவருக்கு பதிலாக இஷான் கிஷன் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஐசிசி டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.