கவனம்…வெளிநாடுகளிலிருந்து அழைப்பு வருகிறதா..? ‘வாட்ஸ் அப்’ பயனர்களுக்கு எச்சரிக்கை.!!

உலகளவில் பெரும்பலோனரால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  செய்திகளை அனுப்புவதற்கும், மற்றோர்களை தொடர்பு கொள்வதற்கும் மக்கள் வாட்ஸ் அப்-பை பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய வாட்ஸ் அப்பில் பயனர்களை ஏமாற்றி சிலர் மோசடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே, வாட்ஸ் அப்  பயனர்கள் பலருக்கும் எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிலிருந்து சர்வதேச எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

மக்கள் எந்த நாட்டிலிருந்தும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் வாட்ஸ்-அப்பில் அழைப்புகளைச் செய்துகொள்ள வசதிகள் உள்ளது.  இது  மோசடி செய்பவர்களுக்கு எளிதாக்கியுள்ளது.  வெளிநாட்டு எண்ணிலிருந்து அழைப்பைப் பெறும்போது பெரும்பாலான மக்கள் குழப்பமடைந்தாலும், அழைப்பாளர்கள் யார் என தெரியவேண்டும் என்பதற்காக அழைப்பை எடுத்து பேச தொடங்கியுள்ளனர்.

இதைப்போல வெளிநாடு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்கவேண்டாம். ஏனென்றால், பல சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்காக பயனர்களின் ரகசிய தகவலை பெற முயற்சி செய்கிறார்கள்.  அத்தகைய வெளிநாட்டு எண்களில் இருந்து  இருந்து அழைப்புகள் வந்தால் எந்த தனிப்பட்ட தகவலையும் வெளியிடக்கூடாது.

ஒரு சர்வதேச எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் அது  அந்த நாட்டைச் சேர்ந்தது என்று அர்த்தமல்ல என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இனிமேல் தெரியாத வெளிநாட்டு எண்களிலிருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.