ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே வீரரின் சாதனை…சமன் செய்த சாஹல்.!

Chahal IPLWickets

ஐபிஎல் தொடரில் நேற்று 4 விக்கெட்கள் எடுத்ததன் மூலம் சாஹல் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்களை பதிவு செய்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 215 ரன்கள் இலக்கை துரத்திய SRH அணி பரபரப்பான இறுதி ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. ஹைதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் ராஜஸ்தான் அணி வீரர் சாஹல் சிறப்பாக பந்துவீசி 29 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சாஹல் ஒட்டுமொத்தமாக 183 ஐபிஎல் விக்கெட்களை(142 போட்டிகளில்) வீழ்த்தியுள்ளார். முன்னாள் சிஎஸ்கே வீரர் பிராவோ 161 போட்டிகளில் 183 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனை சாஹல் தற்போது சமன் செய்து சாதனை படைத்துள்ளார். நடப்பு கிரிக்கெட்டில் ஐபிஎல் தொடரில் சாஹல் மற்றும் பிராவோ 183 விக்கெட்களும், சாவ்லா 174 விக்கெட்களும் வீழ்த்தி அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்