தமிழ்நாட்டில் பொது அமைதியை சீர்குலைக்க கூடாது…உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.!!

Manish Kashyap

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக குற்றச்சாட்டின் பெயரில் யூடியூபர் மணீஷ் காஷ்யப்க்கு எதிராக தமிழ்நாடு அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்கள்.

இதனையடுத்து, மணீஷ் காஷ்யப் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை  தள்ளுபடி செய்ய வேண்டும், ரத்து செய்ய வேண்டும் என்று கூறியும், பல்வேறு இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறிக்கை ஒரே இடத்தில் மாற்ற வேண்டும் என்று  கோரிக்கை வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு  வந்தபோது,  மணீஷ் காஷ்யப் தொடர்ச்சியாக இத்தகைய தகவல்களை வேண்டுமென்றே பரப்பி இருக்கிறார் என்பதை தமிழ்நாடு அரசு சார்பில்  கூறியுள்ளனர். இதைப்போலவே, பிகார் மாநில அரசும் அதேதான் கூறியிருந்தார்கள்.

இதனையடுத்து, அவரது மனுக்கள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு அறிவுறுத்தலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமானது குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  அமைதியாக இருக்கும் மாநிலமான தமிழ்நாட்டில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் எந்த ஒரு விஷயத்தையும் பதிவிட கூடாது எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்