இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லையே…பாகிஸ்தான் அணிக்கு வந்த பெரும் சோதனை.!!
ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் 4-வது ஒரு நாள் போட்டியின் வெற்றிக்குப் பிறகு, வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான் நம்பர் 1 இடத்தை பிடித்தது. ஆனால் தரவரிசையில் அவர்களால் 2 நாட்கள் மட்டுமே இருக்க முடிந்தது.
ஏனென்றால், நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 299 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக, 300 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46.1 ஓவர்களில் 252 ரன்களில் அணைத்து விக்கெட்களையும் இழந்தது.
எனவே, நியூசிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை மட்டும் தழுவியது மட்டுமின்றி, தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடத்தில இருந்து தற்போது 3-வது இடத்திற்கு சென்று உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் ரேட்டிங் 112-ஆக குறைந்துள்ளது,
மேலும், ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்திற்கு சென்றுள்ளது. அதைப்போல, இந்தியா அணி 113 ரேட்டிங் உடன் 2-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.