குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் ஆளுநர்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.! 

MK Stalin

குழந்தை திருமணத்தை ஆளுநர் ரவி ஆதரிக்கிறாரா.? என முதல்வர் மு.க.ஸ்டாலின் என நேற்று பொதுக்கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

திமுக ஆட்சியின் 2 ஆண்டுகால நிறைவை அடுத்து அதனை கொண்டாடும் வகையில் சென்னை , பல்லாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் , டி.ஆர்.பாலு , தாமோ.அன்பரசன் என பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் கூறிய, காலாவதியான திராவிட மாடல், சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம் என பல்வேறு கருத்துக்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார். திராவிட மாடல் காலாவதியாகவில்லை. சனாதன கொள்கை தான் காலாவதியாகிவிட்டது என கூறினார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின்  அமைதியை சீர்குலைக்க ஆளுநர் ஏன் தொடர்ந்து செயல்படுகிறார் என வினாவினார். மேலும், சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் அரசு தரப்பு விளக்கம் அளித்த பிறகும் ஆளுநர் இதனை பேசுகிறார். இதன் மூலம் குழந்தை திருமணத்தை ஆளுநர் ரவி ஆதரிக்கிறாரா.? என பேசினார் முதல்வர்.

அடுத்ததாக, ஆளுநர் ரவி தன்னை சர்வாதிகாரம் படைத்தவராக எண்ணி கொள்கிறார். ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழகத்தின் ஆட்சியை நடத்த வேண்டும் என எண்ணுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் சட்டத்திற்கு ஆளுநர் முறையாக கையெழுத்திட வேண்டும் எனவும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்