கூகுள் நிறுவன மாடியில் இருந்து குதித்து 31 வயது ஊழியர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்திலிருந்து 31 வயது நிரம்பிய பொறியாளர் குதித்து உயிரிழப்பு.
நியூயார்க் நகரில் உள்ள கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தில் இருந்து 31 வயது சீனியர் மென்பொருள் பொறியாளர் குதித்து உயிரிழந்தார். கூகுள் நிறுவன அலுவலக கட்டிடத்தின் 14 வது மாடியில் இருந்து குதித்த அந்த நபரை, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், இறந்துவிட்டதாக தெரிவித்ததாக என்று காவல்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தற்கொலைக்கான காரணங்கள் குறித்து காவல்துறை விசேரநயி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன் 33 வயதான கூகுள் ஊழியர் ஜேக்கப் பிராட், பிப்ரவரி 16 ஆம் தேதி மன்ஹாட்டனில் உள்ள அவரது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில், தற்போது சில மாதங்களுக்கு பிறகு மற்றொரு கூகுள் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!
May 9, 2025