உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியீடு!எந்த நாடு முதலிடம்?இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
இந்தியா உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், நான்கு இடங்கள் முன்னேறி 137வது இடத்தை பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் செயல்படும் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 137வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் 141வது இடத்தில் இருந்த இந்தியா 137வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
கடுமையான சட்டங்கள் மூலம் இந்தியாவில் வன்முறை மரணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை, சாட், கொலம்பியா, உகாண்டா நாடுகளிலும் வன்முறை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் 2008-லிருந்தே ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.
நியூசிலாந்து 2வது இடத்தையும், ஆஸ்திரியா 3வது இடத்தையும் பிடித்துள்ளன. போர்ச்சுகல் 4வது இடத்தை பிடித்துள்ளது. அமைதியற்ற சூழல் நிலவும் சிரியா, ஆப்கன், ஈரான், தெற்கு சூடான், ஏமன் ஆகிய நாடுகள் கடைசி இடங்களில் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.