நான் எனது அணியினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.! உருக்கமாக பேசி வீடியோ பகிர்ந்த மெஸ்ஸி.!

lionel messi

எனது அணியினர் மற்றும் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். – மெஸ்ஸி வெளியிட்ட உருக்கமான வீடியோ. 

உலகில் முன்னணி கால்பந்தாட்ட நட்சத்திர வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, பாரிஸ் செயின்ட் ஜெயிண்ட் (PSG F.C) அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் அண்மையில் அணி நிர்வாகத்திடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தனது விடுமுறையை கழிக்க சவூதி அரேபியவுக்கு சென்று விட்டார்.

அங்கு, லியோனல் மெஸ்ஸியை சவூதி அரேபியாவின் அல் ஹிலால் என்ற கால்பந்தாட்ட கிளப் அணி அதிக சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை அடுத்து மெஸ்ஸியை, பாரிஸ் செயின்ட் ஜெயிண்ட் அணி நிர்வாகம் 2 வாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்தனர்.

இதனை அடுத்து தற்போது வீடியோ ஒன்றை மெஸ்ஸி வெளியிட்டுள்ளார். அதில், தற்போது என்ன நடக்கிறது என்பதை பற்றி விளக்க இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். முதலில், எனது அணியினர் மற்றும் நிர்வாகத்தினரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உண்மையாக சொன்னால், இதற்கு முன்னர் இருந்தது போலவே, விடுமுறை நாட்களை கழிக்கவே வெளிநாடு போகிறோம் என்று நினைத்து சவூதி அரேபியா கிளம்பினேன்.

 நான் முன்பு ரத்து செய்தது போல, இந்த முறை என்னால் ரத்து செய்ய முடியவில்லை. அதனால் இந்த விடுமுறைக்கு சவூதி வந்திருந்தேன். கிளப் என்ன முடிவு எடுக்கிறதோ அதனை ஏற்றுகொள்வேன். அதற்காக நான் காத்திருப்பேன். என மெஸ்ஸி அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்