#BREAKING: வி.ஏ.ஓ கொலை வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்!
முறப்பநாடு வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதான ராமசுப்பிப்ரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமீபத்தில் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவகத்திற்குள் புகுந்து வி.ஏ.ஓ., லூர்து பிரான்சிஸை வெட்டி கொலை செய்த வழக்கில் ராமசுப்பிப்ரமணியன், மாரிமுத்து ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொலை வழக்கில் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.