தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யவில்லை என்றால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்.. சீமான் பேட்டி.!!

SEEMAN

இயக்குனர் லதா சீனிவாசன் எழுதிய, இயக்குனர் சுதிப்தோ சென்னின் இயக்கிய இந்தி திரைப்படமான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. படத்தில் கேரள பெண்கள் ISIS தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக கட்டப்பட்டிருந்ததால் இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து, படத்துதடை வெளியீட தடை விதிக்க நீதிமன்றம் நேற்று மறுத்ததை அடுத்து இன்று படம் வெளியாகவுள்ளது. இதனால் கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க படம்  கேரளா மற்றும் தமிழக திரையரங்குகளில் எங்கு எல்லாம் வெளியாகியுள்ளதோ அங்கு எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படத்தை தடை செய்ய கூறி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நடந்த பேட்டியில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில் அரசு தடை செய்ய வேண்டும். அப்படி தடை செய்யவில்லை என்றால் திரையரங்குகளை நாங்கள் முற்றுகையிடுவோம். பல முறை நங்கள் கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டோம்.

தயவு செய்து மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து படத்தை நிறுத்துங்கள் என்று அப்படி இருந்து திரும்ப திரும்ப அந்த வேலையை செய்தால் என்ன அர்த்தம்..? இந்த படம் தேவையற்றது. இந்த படத்திற்கு திரையரங்கு வாசலில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?  நான் சட்டம் ஒழுங்கை கெடுக்கிறேன் என்று சொல்வீர்கள்.

எனவே எதற்காக இந்த படத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறீர்கள்..?  எதற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுங்கள். தமிழக அரசு கேரளா ஸ்டோரி படத்தை தமிழ்நாட்டில்  தடை செய்யவேண்டும்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்