மாணவர்கள் கவனத்திற்கு! ஆகஸ்ட் 2ல் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்!

engineering Counselling

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2-ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு. 

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி நிறைவு பெறுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வுக்கான உத்தேச தேதி பட்டியலை வெளியிட்டது தொழில்நுட்ப கல்வி இயக்ககம்.

பொறியியல் கலந்தாய்வுக்கான உத்தேச தேதி பட்டியலில், முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொது பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ரேண்டம் எண் ஜூன் 7-ல் வெளியாகும் நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30 வரை நடக்கிறது.

மேலும், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே,  பி.இ., பி.டெக் மற்றும் பி.ஆர்க் பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  https://www.tneaonline.org or https://www.tndte.gov.in என்ற இணையதள வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Counselling

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்