தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத் பவார் தொடர வேண்டும்.! உயர்மட்டக்குழு தீர்மானம்.!
தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவார் தொடர வேண்டும் என அக்கட்சி உயர்மட்டக்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தான், தனது கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மகாராஷ்டிரா தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் இப்படியான முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி மற்ற மாநில கட்சி தலைவர்களும் குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட சரத் பவார் கட்சி பொறுப்பில் இருந்து விலக கூடாது என வலியுறுத்தி இருந்தார்.
ஏற்கனவே, சரத் பவார், அடுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்க உயர்மட்ட குழுவை நிர்ணயித்து இருந்தார். இந்த உயர்மட்ட குழு இன்று மும்பையில் ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி தலைவராக சரத் பவார் தான் தொடர வேண்டும் என குழு தீர்மானம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கும் போதே கட்சி அலுவகத்திற்கு வெளியே தொண்டர்கள் சரத் பவருக்கு ஆதரவாக அவர் பதவியில் தொடரவேண்டும் என கோஷம் எழுப்பினர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த தலைவர் யார் என்பதை பற்றி ஆலோசிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.