சரத்பவார் தனது முடிவை பரிசீலினை செய்ய வேண்டும் – முதலமைச்சர் கோரிக்கை!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் ஒரு சில நரட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அடுத்த ஆண்டு மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலும், மக்களவைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், சரத் பவாரின் இந்த திடீர் அறிவிப்பால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
என்.சி.பி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அந்த பதவியை யாருக்கு வழங்குவது என்பதை முடிவு செய்ய குழு அமைக்கப்படும் என்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் குழு முடிவு செய்யும் எனவும் சரத் பவார் கூறியிருந்தார். மேலும், ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளதாக அஜித்பவார் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த சரத் பவார், தனது முடிவை பரிசீலினை செய்ய வேண்டும் மூத்த தலைவர்கள் என வலியுறுத்தி வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் சரத்பவார் தொடர வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய சரத் பவாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் பதிவில், வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலை, நாடு எதிர்கொள்ள உள்ள நிலையில், தேசிய அளவில் வலுவான மதசார்பற்ற கூட்டணியை கட்டமைக்க, சரத்பவார் தன்னுடைய முடிவை மறு பரிசீலினை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
With national politics centred around upcoming 2024 General Elections, I request, Thiru. @PawarSpeaks, one of the tallest leaders, crucial in strengthening secular alliance across India, to reconsider his decision to relinquish the President post of @NCPspeaks and continue to…
— M.K.Stalin (@mkstalin) May 5, 2023