போலி கணக்குகள்… வன்முறை தூண்டும் பதிவுகள்.! தீவிர கண்காணிபபில் தமிழ்நாடு சைபர் கிரைம்.!
ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், உயரதிகாரிகள் குறித்த 386 அவதூறு பரப்பும் வகையில் இருக்கும் வீடியோக்களை முடக்க யூடியூப் நிறுவனத்துக்கு சென்னை சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
பிரபல சமூக வலைத்தளங்களான யூடியூப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான போலி கணக்குகள், வன்முறையை தூண்டும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கண்காணிக்கப்பட்டு தமிழ்நாடு சைபர் கிரைம் தடை செய்து வருகிறது. அந்த வகையில், கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 221 கடன் செயலிகளை நீக்கப்பட்டுள்ளது.
61 கடன் செயலிகளை நீக்க எடுக்கப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டில் மட்டும் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளத்தில் 40 சட்டவிரோத பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.