மணிப்பூர் வன்முறை : இதுதான் அமைதியா.? பிரதமர் மோடியை விமர்சித்த மாநிலங்களவை எம்பி கபில் சிபில்.!

kabil sibil

மணிப்பூரில் கலவரம் நடந்து கொண்டு இருக்கும் போது காங்கிரசை பிரதமர் அமைதியின் எதிரி என கூறுகிறார். – கபில் சிபில் டிவிட்டரில் கடும் விமர்சனம்.

மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வன்முறை அதிகமாகி கொண்டு இருக்கிறது. அங்கு வசிக்கும் ஒரு பிரிவினரை எஸ்டி பிரிவில் சேர்க்க அரசு முன்னெடுத்த போது, அதற்கு இன்னொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

தற்போது இந்த சம்பவங்கள் குறித்து மூத்த வழக்கறிஞரும் மாநிலங்களவை எம்பியுமான கபில் சிபில் தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியை பார்த்து ‘அமைதிக்கு எதிரானவர்கள்’ என்று குறிப்பிடுகிறார். ஆனால், அதே வேளையில் இங்கு மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. தேவாலயங்கள் எரிக்கப்படுகின்றன. மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், என குறிப்பிட்டுள்ளார் .

மேலும் , 2014 முதல் 2022 வரை 5415 ஜாதி கலவரங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன. உத்தர பிரதேசத்தில் 10900 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன.  என குறிப்பிட்டு பாஜக எதனை அமைதி என்கிறது என கேள்வி எழுப்பி உள்ளார். மாநிலங்களவை எம்.பி கபில் சிபில் பதிவிட்ட இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்