மே 9 வரை அனைத்து விமானங்களும் ரத்து! டிக்கெட் தொகையை திருப்பி அளிக்க Go First நிறுவனத்துக்கு உத்தரவு!

Go First

மே 9-ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து என கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும் அபாய நிலையில் உள்ளது. கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் நேற்று முன்தினம் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்திருந்தது.  அதில், அமெரிக்காவில் பிடபிள்யூ என்று அழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து விமான இன்ஜின்கள் முறையாக விநியோகிக்கப்படாததால் விமான சேவையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதனால் ஊழியர்களுக்கு ஊதியம், விமான நிலையங்களுக்கான கட்டணம் செலுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதால், கடும் இழப்பை சந்தித்துள்ளது என்றும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கும்பட்சத்தில் மே 9-ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்யப்படுவதாக கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்தபோது, அனைத்து விமான சேவைகளையும் மே 3, 4 தேதிகளில் ரத்து செய்வதாக Go First நிறுவனம் அறிவித்த பின்னர், அது மே 5ம் வரை நீட்டித்து அறிவித்தது. தற்போது, அனைத்து விமான சேவைகளும் அடுத்த செவ்வாய் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமில்லாமல் மே 15 வரை விமானங்களுக்கான புதிய டிக்கெட் விற்பனையை Go First விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக Go First நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செயல்பாட்டு காரணங்களால் மே 9ம் தேதி வரை கோ ஃபர்ஸ்ட் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம். விரைவில் டிக்கெட் தொகை ரீஃபண்ட் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக டிக்கெட் தொகையை திருப்பி அளிக்குமாறு கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து (DGCA)  இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்