மக்களே.! நாளை புறநிழல் சந்திர கிரகணம்.! வெறும் கண்களால் பார்க்கலாம்…எப்போது தெரியுமா?

lunar eclipse

ஏப்ரல் 20 ஆம் தேதி கலப்பின சூரிய கிரகணத்தைத் தொடர்ந்து, சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஒரே நேர்கோட்டில் சந்திக்கவுள்ளதால் வானத்தில் அடுத்த வானியல் நிகழ்வு (சந்திர கிரகணம்) நாளை தெரிகிறது.

மே 5-ம் தேதி நாளை புறநிழல் சந்திர கிரகணம் நிகழவுள்ளதாகவும், இந்த கிரகணத்தின் போது, வழக்கத்தைவிட நிலவு கருமையாக காணப்படும் என நாசா தகவல் தெரிவித்துள்ளது. இதனை வெறும் கண்களால் காண முடியும் எனவும், இந்திய நேரப்படி இரவு 8.44 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 1.01 மணி வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.

lunar eclipse on may 5
lunar eclipse on may [Image source : Photo: AFP]

புறநிழல் சந்திர கிரகணம்:

முழு நிலவின் போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். பூமியானது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் துல்லியமாக அமைந்திருக்கும் போது. பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இது சந்திரனால் பிரதிபலிக்கும் சூரிய ஒளியை மறைக்கிறது. பூமியின் நிழலின் இருண்ட பகுதியான பூமியின் குடை வழியாக சந்திரன் செல்லும் பாரம்பரிய கிரகணத்திலிருந்து இது வேறுபடும் என கூறப்படுகிறது.

lunar eclipse on may 5 2023
lunar eclipse on may 5 2023 [Image source : space.com]

இந்தியாவில் எப்போது தெரியும்:

இந்தியாவில் இந்த சந்திர கிரகணம் நாளை இரவு 08:44 மணிக்கு தொடங்கி நாளை மறுநாள் இரவு 01:01 மணிக்கு முடிவடையும். ஆனால், சந்திரன் பூமியின் பெனும்பிராவில் நுழைந்து வெளியேறுவதால் இந்த கிரகணத்தின் ஆரம்பம் மற்றும் முடிவை நாம் காண முடியாது என்று வானியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

lunar eclipse 2023
lunar eclipse 2023 [Image source : space.com]

எந்தெந்த நாடுகளில் தெரியும்:

தெளிவான வானத்துடன் கூடிய சூழ்நிலையில் இருக்கும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கிரகணம் தெரியும். அதன்படி, இந்த சந்திர கிரகணம் ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் காணப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்