எனது மாநிலம் பற்றி எரிகிறது! தயவுசெய்து உதவுங்கள் – பிரதமருக்கு குத்துச்சண்டை வீராங்கனை கோரிக்கை!
![mary kom](https://www.dinasuvadu.com/wp-content/uploads/DinasuvaduCDN/image/2023/05/mary-kom.jpg)
எனது மாநிலம் மணிப்பூர் பற்றி எரிகிறது என பிரதமருக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கோரிக்கை.
மணிப்பூர் மாநிலத்தில் மெய்டேய் என்ற சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக வெடித்து, அங்கு அமைதியின்மை நிலவுகிறது. அதாவது, மணிப்பூர் மாநிலத்தில் மெய்டேய் என்ற சமூகத்தை பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின சமூகத்தினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பழங்குடியின மாணவர் அமைப்பு சார்பில் அம்மாநிலத்தின் மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் நேற்று பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டுள்ளது. இந்த பேரணிக்கு எதிராக சில பகுதிகளில் எதிர் தரப்பும் பேரணி நடத்தியுள்ளனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்து, கலவரமானது. இரவில் நடந்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நகரமே தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. பின்னர் ராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சேதம் நிலவரம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு, மொபைல் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி.மேரி கோம், பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணியின் போது ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு மணிப்பூரில் பரவலான வன்முறை மற்றும் தீ வைப்புகளின் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அவரது பதிவில், எனது மாநிலமான மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. தயவு செய்து உதவுங்கள் என்று பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்கை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.
My state Manipur is burning, kindly help @narendramodi @PMOIndia @AmitShah @rajnathsingh @republic @ndtv @IndiaToday pic.twitter.com/VMdmYMoKqP
— M C Mary Kom OLY (@MangteC) May 3, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!
February 13, 2025![PM Modi USA Visit](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/PM-Modi-USA-Visit.webp)
மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு..அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
February 13, 2025![gold price](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/gold-price-1-1.webp)