பஞ்சாப் அணியின் ட்ரோல்… வெற்றி பெற்று மும்பை அணி பதிலடி ட்வீட்.!

MI PBKS Tweet

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதையடுத்து, மும்பை அணி, பஞ்சாப் அணியின் ட்ரோல்-க்கு ட்வீட் மூலம் பதிலடி கொடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்று மொகாலியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து அதிரடியாக விளையாடி 214 ரன்கள் குவித்தது. இதனையடுத்து மிகப்பெரிய இலக்கை துரத்திய மும்பை அணி இஷான் கிஷன், சூர்யகுமார் ஆகியோரின் அதிரடியால் 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து எளிதாக இலக்கை அடைந்தது.

இந்த வெற்றிக்கு பிறகு மும்பை அணி, தனது ட்விட்டரில் அனைத்து காவல்துறைக்கும் என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். முன்னதாக மும்பை-பஞ்சாப் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வீரர் அர்ஷ்தீப் சிங் மும்பை அணியின் விக்கெட்களை இருமுறை ஸ்டம்ப்களை உடைத்து வீழ்த்தினார்.

அப்போது பஞ்சாப் அணி தனது ட்வீட்டில், ஸ்டம்ப்களை உடைத்ததற்கு மும்பை காவல்துறையிடம் நாங்கள் ஒரு குற்றத்தை பதிவு செய்ய விரும்புகிறோம் என்று கேலியாக பதிவிட்டிருந்தனர், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மும்பை அணி நேற்றைய வெற்றிக்கு பிறகு ‘அனைத்து காவல்துறைக்கும் ஒரு பதிவு, என ட்வீட் செய்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இங்கு குற்றம் பதிவு செய்யும் அளவுக்கு  எதுவும் நிகழவில்லை, நாங்கள் இங்கே மொகாலியில் கிரிக்கெட் விளையாட வந்து, ஒரு அணியை வீழ்த்தியுள்ளோம். உங்களுக்கு வேறு முக்கியமான வேலை இருக்கும், உங்களது சேவைக்கும் அது எப்போதும் தொடரவேண்டும் எனவும் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளது.<

/p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்