ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஸ்டெர்லைட் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுகளை ஜூன் 1ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ஆணை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து மனுக்களையும் ஆகஸ்ட் 23, 24ம் தேதிகளில் விசாரித்து முடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுகளை ஜூன் 1ம் தேதிக்குள் தமிழக அரசு அமல்படுத்த உச்சநீதிமன்றம் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.
அதாவது, ஸ்டெர்லைட் பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஜூன் 1ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.