உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்.! ஆளுநர் ரவி பேச்சுக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம்.!

Su Venkatesan MP

தமிழக ஆளுநர் ரவியின் கோபத்தை ரசிக்கிறோம் என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் விமர்சனம்.

ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த ஆளுநர் என்ஆர் ரவி, தமிழ் மக்கள் மிகவும் பண்பட்டவர்கள், ஆழ்ந்த ஆன்மிக உணர்வும், விருந்தோம்பல் பண்பும் கொண்டவர்கள். தமிழ்நாட்டில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாக உணர்கிறேன். இங்குள்ள மக்களுக்கும், அரசியலுக்கும் டையே நிறைய வேறுபாடு தெரிகிறது. தமிழ்நாடு அரசியலில் நாகரியத்தையும், கண்ணியத்தையும் எதிர்பார்க்க முடியாது, ஆனால், தமிழ்நாட்டு மக்களிடம் அவற்றை பெற முடியும் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், திராவிட மாடல் எனும் காலாவதியான ஐடியா, இந்தியாவின் ஒரே நாடு ஒரே கொள்கைக்கு எதிரானது. காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி இது. ஆனால் எனக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி எல்லை தாண்டி செயல்படுகிறார் என்று திமுக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டு பொய்யானது. ஆளுநருக்கு என்று ஒரே ஒரு எல்லை தான் இருக்கிறது. அந்த எல்லை என்பது அரசியல் சாசனத்தால் வகுக்கப்பட்டது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை அறிந்தும் நான் எப்படி சட்டப்பேரவையில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும். கள்ளக்குறிச்சி கலவரம், கோவை கார் வெடிப்பு, வி.ஏ.ஓ படுகொலை போன்றவை நடக்கும் போது, தமிழ்நாடு எப்படி அமைதிப்பூங்காவாகும்? என கேள்வி எழுப்பினார். மேலும், ஆளுநர் மாளிகை செலவீனங்கள் குறித்து பேசிய தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவித்தார். எனவே, ஆளுநர் பேட்டி தான் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் பரபரப்பாக பேச தொடங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமிழக ஆளுநர் ரவியின் கோபத்தை ரசிப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், திராவிட மாடல் செத்துப் போன தத்துவம், மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது, பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம் என்று சொல்லும் ஆளுநர் அவர்களே, களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் கோபத்தை ரசிக்கிறோம் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்