கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.! திருமணத்திற்கு சென்ற 11 பேர் பலி…

Chhattisgarh Road Accident

சத்தீஸ்கரில் ஏற்பட்ட சாலை விபத்தில் குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் நேற்று இரவு எஸ்யூவி கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் 5 பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலம் சோரம் பட்கான் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் ஒரு திருமணத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். இரவில் அவர்கள் பயணம் மேற்கொண்ட கார், எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அம்மாநில தேசிய நெடுஞ்சாலை-30 இல் புரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜக்தாரா கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தற்போது, உயிரிழந்த அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K