மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்.! தங்கபல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர்.!

Kallazhagar Temple

சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக மதுரையை நோக்கி புறப்பட்டார் அழகர். 

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது.  9ஆம் நாளில் திக் விஜயம், அடுத்து 10ஆம் நாளில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 11ஆம் நாளான நேற்று மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் மதுரை வீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இந்த சித்திரை விழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நாளை (மே 5) காலை 5.45 –  6.15 மணிக்குள் நடைபெற உள்ளது. இதனை காண உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் திராளானோர் மதுரைக்கு வருவர். தற்போது இதன் தொடக்க நிகழ்வான அழகர் புறப்பாடு நேற்று இரவு நடைபெற்றது.

அழகர்கோவிலில் இருந்து சுந்தராஜ பெருமாள் கண்டாங்கி பட்டு உடுத்தி, வால், வளரியுடன் கள்ளழகர் வேடம் அணிந்து தங்கபல்லக்கில் ஆயிரக்கணக்கான பக்தர்களில் கோவிந்தா கோஷம் எழுப்ப மதுரையை நோக்கி கள்ளழகர் புறப்பட்டார்.  முன்னதாக அழகர்கோவில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமியிடம் உத்தரவு பெரும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது உத்தரவு கிடைத்த பின் கள்ளழகரை பக்தர்கள் தங்கபல்லக்கினை குலுக்கி கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் மதுரையினை நோக்கி புறப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மதுரையில் கள்ளழகரை வரவேற்க, மூன்று மாவடி பகுதியில் எதிர்சேவை நிகழ்வு துவங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list
trump tariffs
tariffs trump