மே 9-ம் தேதி வெளியாகிறது பிரபாஸின் ஆதிபுருஷ் டிரெய்லர்.!

மே 9ஆம் தேதி ஆதிபுருஷ் டிரைலர் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.
ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படம், இந்திய புராணக் கதையான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் பற்றி பேச்சுக்கள் அதிகமாக உள்ளது. அதாவது, இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியிட்ட போது, படத்தின் கிராபிக்ஸ் பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்தது. படம் பொம்மை படம் உள்ளதாக விமர்சனத்தை எதிர்கொண்டது.
பின்னர், படக்குழு அதனை ஏற்றுக்கொண்டு படத்தின் கிராபிக்ஸ் வேலைகளில் கவனம் செலுத்த போவதாக அறிவித்தது. தற்போது, மே 9 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்வில், பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலி கான், ஓம் ராவுத் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆதிபுருஷின் டிரெய்லரை வெளியிடவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025