உலக பத்திரிக்கை சுதந்திர நாள்; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து ட்வீட்.!

CM Stalin MK

உலக பத்திரிக்கை சுதந்திர நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் இன்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இன்று மே-3 ஆம் தேதி உலகம் முழுவதும் பத்திரிக்கை சுதந்திரநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின், ட்விட்டரில் ஜனநாயகத்தின் நான்காவது தூணை வலிமையாக வைத்திருக்க பணியாற்றும் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டரில் கூறியதாவது, உலகபத்திரிக்கை சுதந்திர நாளில், பல தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கிடையேயும், உண்மையாக பணியாற்றும் துணிச்சல்மிகு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்