டாஸ்மாக் வருமானத்தில் தமிழக அரசு நடக்கவில்லை.. தானியங்கி இயந்திரம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

senthil balaji

டாஸ்மாக் கடையில் இயங்கும் தானியங்கி டாஸ்மாக் இயந்திரம் குறித்த விமர்சனத்துக்கு அமைச்சர் விளக்கம்.

சென்னை திருமங்கலத்தில் தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் கடை வருமானத்தில் தமிழக அரசு நடப்பதாக கூறுவது வேதனையளிக்கிறது. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக அரசு மீது குற்றச்சாட்டுகளை தேடி தேடி வைக்கின்றன. நிர்வாக சீர்திருத்தம் செய்யும்போது, திரித்து கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகளை மூடப்பட்டுள்ளன. மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.5, ரூ.10 என கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சுமார் ரூ.5.5 கோடி அபராதம் அவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் நேர்மையாகவும் வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகிறது என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், தானியங்கி மது விற்பனை இயந்திர விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். மால்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் உள்பகுதியில்தான் தானியங்கி விற்பனை இயந்திரம் உள்ளது.

காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த கடை செயல்படுகிறது. மாலில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலம் 24 மணி நேரமும் மது எடுக்க முடியாது. சாலையிலோ, பொது இடங்களிலோ இந்த இயந்திரம் இருப்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. ஏற்கனவே உள்ள மால் சாப்புகளில் மட்டுமே தானியங்கி மது வழங்கும் இயந்திரம் உள்ளன.

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் வழங்கும் வசதி எந்த இடத்திலும் இல்லை. வணிக வளாகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் எலைட் மதுபான கடைக்குள் மட்டுமே இயந்திரம் உள்ளது. எலைட் மதுபான கடையில் விற்பனையாளர் முன்னிலையில் மட்டுமே மதுபான தரும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் மது விற்பனை நடைமுறையில் உள்ளது. மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. டாஸ்மாக் நிறுவனத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஆட்சி நடத்தியதுபோல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என தானியங்கி டாஸ்மாக் இயந்திரம் குறித்த விமர்சனத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army