ஆரஞ்சு அலர்ட்.! பல மாவட்டங்களில் கனமழை.. 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், விழுப்புரம் ,திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும், இதன் காரணமாக இந்த 3 மாவட்டங்களுக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025